இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது.
கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.