திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லம்பத்துவ
வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திரியாய பகுதியை
சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.கல்லம்பத்துவ வனப்பகுதிக்கு
விறகு சேகரிக்கச்சென்றிருந்த போது குறித்த நபர் காட்டு யானை தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.