எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் பலம் வாய்ந்த அரசியல் குழுவொன்று செயற்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திவாய்ந்த எம்.பி ஒருவர் வெளிநாட்டில் விமுக்தியை சந்தித்து இது குறித்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.