ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் பல விமானப் பயணங்கள் தாமதமடைந்திருந்தன. சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.