சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான
பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில்
நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்
பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம்
பாராட்டு
தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன்,
இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு
இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் அமைச்சர்,
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள்
முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச்
செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும்
ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளது.