மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய
மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ்
கையளிக்கப்பட்டது.
150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்
நினைவு சின்னமாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின்
பயன்பாட்டுக்காக பென்ரைவ் ஒரு தொகை கல்லூரி அதிபர் அன்ரன் பெனடிக்
ஜோசெபப்பிடம் கையளிக்கப்பட்டது.
புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம்
ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் பாடசாலைக்கான நலன்
செயல்பாட்டின் மூன்றாவது செயற்பாடாக இந்த பென்ரைவ் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கல்லூரி 1996 ஆண்டு மாணவர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் என பலர்
கலந்துகொண்டனர்