சீரற்ற காலநிலையால் 06 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

 


நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் 12 மாவட்டங்களில், 13 ஆயிரத்து 27 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.