10-ம் ஆண்டு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு காதலன் தலை மறைவு.

 


தன்னுடைய மிகவும் இளமையான மனைவி கர்ப்பமடைந்து விட்டாள் என்பதை அறிந்து, தப்பியோடிய கர்ப்பத்துக்கு காரணமானவரை தேடி வலை விரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் , மொனராகலை புத்தல பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது.

அங்கு வசிக்கும் இளம் வயதுடைய சிறுமி, மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். அச்சிறுமிக்கு 16 வயதென விசாரணைகளின் கண்டறியப்பட்டது.

16 வயதான சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். அவ்விருவரும் 2020 ஜூன் மாதமளவில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

காதல் விவகாரத்தை அறிந்த அச்சிறுமியின் தாய், 10 ஆம் வகுப்பில் கல்விக்கற்ற மேற்படி சிறுமியான தனது மகள் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள்.

அச்சிறுமி வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது,  அங்கு வந்த காதலன், தன்னுடைய  வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டார்.

அங்கு சுமார் ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவியாக அவ்வருவரும் வாழ்ந்துவந்துள்ளனர். 

இதற்கிடையே தன்னுடைய காதலியான சிறுமி கர்ப்பமடைந்து விட்டார் என்பதை அறிந்து, பிரதேசத்தை விட்டே தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையிலேயே சிறுமி சிசுவொன்றை பிரசவித்துள்ளார் என்று  என்று தெரிவித்த பொலிஸார், தப்பியோடி தலைமறைவாய் இருக்கும் சந்தேகநபரான அச்சிசுவின் தந்தையை  கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.