அம்பாறையில் அண்மைக்காலமாக கரைவலை மூலம் பல இலட்சக்கணக்கான பெறுமதியுடைய மீன்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான கீரி மீன்களை மீனவர்கள் பிடித்தனர்.
கடலரிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு, கரைவலை மூலம் அதிக இலாபம் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
500 ரூபாவிற்கு மூன்று கிலோக்கிராம் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.