நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல்கையிருப்பு மாயம் ?

 

 


 

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளில் இருப்புக்கள் காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்குமாறு சந்தைப்படுத்தல் சபைத் தலைவருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.