பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.