தமிழக எல்லையில்( அத்திப்பள்ளியில்) பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தமிழர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது இந்த எதிர்பாரா விபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் (7) மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக குடோனில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடின. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.