மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் பொலிஸாரால் கைது

 


 

மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர்  ரேணுகா பெரேராவை அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தலையீட்டில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.