நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிப் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும், 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 51 வயதான நபர் உயிரிழந்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.