19 வயது மனைவியை காணவில்லை என்று கணவன் போலீசில் முறைப்பாடு

 


தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அப்பெண்ணின் கணவனான 28 வயதான நபர், செப்டெம்பர் 28ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார். 

வீட்டிலிருந்து வெளியே சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது,  மனைவி வீட்டில் இருக்கவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தபோதும் அங்கும் அவர் இருக்கவில்லை என்று தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய மனைவி 19ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாலும், வீட்டுக்குத் திரும்புவாள் என 28 ஆம் திகதி வரையிலும் காத்திருந்ததாக அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.