விலை சூத்திரத்தின்படி, ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் திங்கட்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலைத் திருத்தம் செப்டெம்பர் (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், விடுமுறை நாளாக இருந்ததால் திங்கட்கிழமை (02) வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
செப்டெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்ற எரிபொருள் விலை திருத்தத்தின் போது அனைத்து எரிபொருட்களின் விலைகளும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.