(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பயலுனர் ஆசிரியர்களுக்கான பதிவு மற்றும் உளீர்ப்பு இன்று (12) திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் மட்டகளப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி
த.கணேசரத்தினம் தலைமையில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோஸ்தர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இலங்கையில் பல பாகத்திலிருந்து
ஆரம்பக் கல்வி, நாடகமும் அரங்கியலும், சமூக விஞ்ஞானம், சித்திரக் கலை , கணிதம், இலத்திரனியல் தொழில்நுட்பவியல், தமிழ் மொழி இலக்கியம் ,சுகாதாரம் உடற்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுக்கான 381 ஆசிரியப் பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் வரவேற்கப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.