2023செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

 


செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கர்ப்பமடைந்துள்ள சிறுமிகளில் 15 பேர் காதல் விவகாரத்தால் இந்நிலையை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் எஞ்சிய 7 சிறுமிகள் பலத்காரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 எனவே இதற்கு மேலும் இவற்றை அனுமதிக்க முடியாது. சட்டத்தை கடுமையாக்கி இவற்றை தடுக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.