2023 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


2023 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானை மனித மோதல், துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வாகன விபத்து போன்ற பல்வேறுபட்ட காரணிகளால் சுமார் 200 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் பல யானைகள் ஒருசில நோய்களின் பொருட்டு உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 6,000 ஆக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.