மட்டக்களப்பு பிரதம தபாலக தபாலதிபர் மயில்வாகனம் ஜெயரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இந்த நிகழ்வில் இவ்வருடத்தில் தபால் சேவையை மேலும் வலுவூட்டும் பொருட்டு பணியாளர்கள் தபால் உத்தியோகத்தர்கள் அடங்கலாக சத்திய சத்திய பிரகடனமும் இங்கு செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து வீதியால் பயணித்த மக்களுக்கு சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பால் சோறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு அஞ்சல் போதனை நிலையத்தின் பிரதம போதனாசிரியர் சோமசுந்தரம் நரேந்திரன் உள்ளிட்ட தபாலதிபர்கள் மற்றும் தபால் சேவகர்கள், பொதுமக்கள் என பலரும் இங்கு கலந்து சிறப்பித்துள்ளனர்.