மாவட்டத்திற்கு ஆயிரம் தென்னங் கன்றுகளை நடும் நடவடிக்கைக்கு அமைய முதல் கட்டமாக மட்டக்களப்பு
புதுக்குடியிருப்பு மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் 200 தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (12) காலை 9 மணி அளவில் இடம் பெற்றது.
தென்னை, பனை, செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி செய்யும் தொனிப்பொருளில் இளைஞர் தேசிய மன்றம் மற்றும் புது குடியிருப்பு பயிற்சி நிலையம் இணைந்து ஏற்பாடு செய்தது.
இவ் நிகழ்வில் மாவட்ட நிர்வாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, மாவட்ட பனை பிரிவு பிரதி பனிப்பாளர் கே.விராஜ், நிர்வாக உதவி பணிப்பாளர் உ.நிர்மாலி, மற்றும்ஊழியர்கள்,பயிற்சிவிப்பாளர்கள், நிலையத்தில் பயிற்சி பெறும் அழகுக்கலை நிபுணர்கள், ஆகியோர் இணைந்து தென்னம் கன்றுகளை நட்டு வைத்தனர்.