(கல்லடி செய்தியாளர்)
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற தரம் -5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 337,956 பரீட்சாத்திகள் தோற்றினர். அத்தோடு இதற்காக 2888 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இப்பரீட்சையில் மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா வலயங்களைச் சேர்ந்த 10218 மாணவர்கள் பரீட்சையில் தோற்றினர்.
இன்று காலை வேளையிலேயே மாணவர்கள் தமது பெற்றோர்கள் சகிதம் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. பின்னர் ஆலய பிரதமகுரு மற்றும் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் தமது பரீட்சை நிலையத்திற்குச் சென்றனர்.
இப்பரீட்சையை முன்னிட்டு பாடசாலை முன்வாசலில் ஆயுதம் தாங்கிய பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.