மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-2023













(கல்லடி செய்தியாளர்)


மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு  இருதயபுரம் கிழக்கு பாலர் பாடசாலை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் பிரதம நூலகர்  த. சிவராணியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறுவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

அத்துடன் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் கதை கூறல் நிகழ்வும் வண்ணாத்திப் பூச்சி சிறுவர் பூங்காவின் பணியாளர் கே.நாகுலேஷ்வரனால் நடாத்தப்பட்டதுடன், சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.

இதன்போது, போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். சிறுவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை வங்கியினரால் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் த. மலர்ச்செல்வன், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன், இருதயபுரம் கிழக்கு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பொது நூலகத்தின் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.