வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், குடியேற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராகவே எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதேநேரம், சிறிலங்கா நீதித்துறை மீதான அழுத்தங்களுக்கு எதிராகவும் இடம்பெறும் இந்த பொது முடக்க போராட்டத்திற்கான செயற்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈபி.ஆர்எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.