மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை (20) வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை (20) வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற. இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.