இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்யவின் 26 வருட சாதனை முறியடிக்கப்பட்டது .

 


இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்யவின் 26 வருட சாதனையை தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் குயின்டன் டி கொக் முறியடித்துள்ளார்.

இந்தியாவின் வான்கடே மைதானத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1997) சனத் ஜயசூர்யா ஆட்டமிழக்காமல் 151 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது..

 பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டத்தில் குயின்டன் டி கொக் 174 ஓட்டங்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.