நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூன்று மாகாணங்களில் 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 770 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 1,034 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,275 குடும்பங்களில் 3,247 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடும் மழை, வெள்ளம், மரம் முறிவு மற்றும் மரம் வெட்டுதல் போன்ற சம்பவங்களினால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.