லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

 


லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாயாகும்.

இதேவேளை, உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 545 ரூபாயாகும்.

ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாயாகும்.

ஒரு கிலோ நெத்தலி விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாயாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லியின் விலை ரூ.10 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.540 ஆக உள்ளது.