மத்தியஸ்த நுட்ப முறை மற்றும் உபாயங்கள் தொடர்பில் 5 நாள் பயிற்சிநெறி!!

 




மத்தியஸ்த நுட்ப முறை மற்றும் உபாயங்கள் தொடர்பான 5 நாள் பயிற்சிநெறி கோறளைப்பற்று மத்தி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிநெறியின் போது அம்பாரை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எம்.ஐ.எம்.ஆஸாத் மற்றும் வவுனியா மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எஸ்.விமலராஜ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.ஆஸாத் மற்றும் கோறளைப்பற்று மேற்கு மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
இப்பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சீ.றமீஸா
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.