தேசிய உற்பத்தித்திறன் செயலகம் நடாத்தும் 5S சான்றிதழ் திட்டத்தில் வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளி கலந்து கொண்டதன் பேரில் மேற்பார்வை மதிப்பீடு செய்வதற்கான உத்தியோகத்தர்கள் வருகைதந்தனர்.
இம் மேற்பார்வை மதிப்பீட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உற்பத்தித்திறன் இணைப்பாளர் ஆர். புவநேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.எம்.ஆயிஷா பீவி, வீ.சுசந்தினி ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா, உற்பத்தித்திறனுக்குப் பொறுப்பான ஆசிரியை எம்.பி.பிர்தௌசியா, சக்ஸஷ் முன்பள்ளி பெற்றோர் சங்கத் தலைவி டெய்சி ரம்யா. சு ஆகியோரால் குறித்த மதிப்பீட்டு உத்தியோகத்தர்களுக்கு முன்பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் 5S நடைமுறைகள் பற்றிய விளக்கமளிக்கப்பட்டன.
இதன் பின்னர் முன்பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் 5S நடைமுறைகளை மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் பார்வையிட்ட பின்னர்> முன்பள்ளி நிறுவுனர் ஏ.என்.எம்.றிழா அவர்களுடன் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இறுதியில் முன்பள்ளிகளில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான புதிய நுட்பங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலக உற்பத்தித்திறன் இணைப்பாளர் ஆர். புவநேந்திரன் அவர்கள் முன்பள்ளி ஆசிரியைகளுடன் அறிவைப்பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.