அஞ்சல் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 1.01 லட்சம் ரூபாயை தொகையைத் திருப்பி அளித்த 67 வயது முதியவரை அஞ்சல் அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.
மகாராஷ்டிர மாநிலத்தின் லாத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் ஜகந்நாத்ராவ் ஜோஷி, சோலாப்பூரில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
அந்த மாவட்டத்தின் காந்தி செளக் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் நிரந்த வைப்பு கணக்குத் தொடங்கிய அவா், 5 ஆண்டுகால முடிவில் தனது தொகையைத் திரும்பப் பெற சென்றாா்.
தனது அஞ்சல் கணக்கில் முதிா்வுத் தொகையாக 264,777 தொகை இருப்பதை அறிந்தாா். தனது கணக்கில் 163,777 க்கு பதிலாக கூடுதல் தொகை வரவு வைக்கப்பட்டிருந்ததை அறிந்த ஜோஷி, அஞ்சல் அலுவலகப் பணியாளரை அணுகி கூடுதல் தொகையான 1.01 லட்சத்தை திரும்ப அளித்தாா்.
இந்தச் சம்பவத்தால் பெரிதும் வியப்பில் ஆழ்ந்த அஞ்சலகப் பணியாளா்கள், ஜோஷியின் நோ்மையைப் பெரிதும் பாராட்டினா்.