மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தல் .

 


வீதி ஓரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகளுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.