மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் முதியோர் தின நிகழ்வு.










(கல்லடி செய்தியாளர்)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த வியாழக்கிழமை   (05) பிரதேச செயலாளர் திருமதி. தட்சணா கௌரி தினேஷின் தலைமையில் முதலைக்குடா பாலையடி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

 "எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்",
" ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்" ஆகிய தொனிப் பொருளுக்கமைய அமைய.நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது ஆலய பிரதம குரு, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார், பட்டிப்பளை பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஷ்குமார்,சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி  முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முதலைக்குடா விளையாட்டு கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும், விளையாட்டுகளும், முதியவர்களின் கலை நிகழ்வுகளும், விளையாட்டுகளும் இடம் பெற்றதுடன், போட்டிகளில் பங்கு பற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.