வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியவர் கைது.

 


வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் தாக்கியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் சிற்றூழியர் ஒருவரை முல்லேரிய பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தியசாலை செயலாளர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசிப்பதால், பாதுகாப்புக்காக இந்த அதிகாரி முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசார் விசாரணை நடத்தி இந்த சிற்றூழியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.