பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தீப்பந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதிகரித்துள்ள மின்சாரக்கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே
போராட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய
மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் போராட்டத்தில்
கலந்துகொண்டு, அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.