பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்வதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்வதில்லை என உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (19) தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே முன்வைத்த காரணங்களை கவனத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தநெரின் புள்ளே, இந்தச் சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.