இந்திய வம்சாமளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 


இந்திய வம்சாமளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்.

அண்மையில் பதிவாளர் நாயகத்தின்  சுற்றுநிருபத்தின்  மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை குறிப்பிடும் பொழுது எங்களுடைய இந்திய வம்சாவழி தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் இந்திய தமிழர் சோனகர் என்பதற்க்கு பதிலாக அந்த பதத்தினை நீக்கி இலங்கை தமிழர் சோனகர் என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மலையக மக்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே வன்மையான எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.  இது என்னுடைய இனத்தையும்  சமூகத்தையும் என்னுடைய முஸ்லிம் சமூக மக்களுடைய கௌரவம் அனைத்தையும் ஒரு கேள்விக்குறியாக்குகின்ற சுற்றுநிருபமாகவேநான் இதனை காண்கின்றேன்.

 200 வருடம் 5 பரம்பரையாக வாழ்ந்துந்துகொண்டிருக்கின்ற இந்திய வம்சாவழி மக்கள் இந்திய அரசாங்கத்தின் பயனாக பல நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த நாடு இவ்வாறான ஒரு மோசமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.