பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

 


பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  லலித் எல்லாவல உள்ளிட்ட சுதந்திர மக்கள் சபை எம்.பி.க்கள் குழுவொன்றே இவ்வாறு தயாராகி வருகின்றது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவளிப்பதாக  லலித் எல்லாவல  தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் படுகொலைகளை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு தமது குழுவினர் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், காலம் கடந்தாலும் நாட்டில் குற்றச்செயல்கள் அப்படியே இருப்பதாகவும் லலித் எல்லாவல எம்.பி தெரிவித்தார். 

இதன் காரணமாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்த எல்லாவல,   நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு போதுமான உண்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.