விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!!

 













மட்டக்களப்பு ராமகிருஷ்ண
மிஷனில் விஜயதசமியை முன்னிட்டு இன்று (24) திகதி ஏடு தொடக்கும் வித்தியாரம்ப நிகழ்வு
இடம்பெற்றிருந்தது.
ஏடு தொடக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்
மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராச் தலைமையில்
இடம்பெற்ற விஜயதசமி நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண
மிஷன் உதவி மேலாளர் சுவாமி கரார்ச்சிதானந்த ஜீ மஹராச் அவர்களும் பங்குபற்றி சிறுவர்களுக்கு
ஏடு தொடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.