மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இல்லையென பதிலளித்துள்ளார்.
சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்- "மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?"
மஹிந்த- "இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என நினைக்கிறேன். முன்னேற்றத்திற்கு புதிய ஒரு தலைமை வேண்டும்".
ஊடகவியலாளர்- "மக்கள் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். நீங்கள் இப்பிரச்சினையில் மக்களின் பக்கம் நிற்பீர்களா?"
மஹிந்த- "இந்த நிலைமையில் மக்களுக்கு உதவுவது அவசியமென நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளளோம். நிச்சயமாக நாம் மக்களின் பக்கம் நிற்போம். நாங்கள் எப்போதும் மக்களின் தான் நின்றோம்".
ஊடகவியலாளர்- "உண்மையை சொன்னால் உங்களின் ஆட்சியின் போது மக்கள் இந்தளவுக்கு பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. நிலைமை அப்போது சிறப்பாக இருந்தது".