அந்த வகையில் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் பொதுச்சந்தை உட்பட பிரதேச மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் மது ஒழிப்பு தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆர். கிருபாகரன் மற்றும் சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.