செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும்

 


1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், அது வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு செயன்முறை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை சார்ந்துள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி, வர்த்தக பொருளாதாரம் கொண்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வரிச் செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.