புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 



புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என பரீட்சைகள் பிரதி ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.