பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர் ஆறு சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.