கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிர​தேசங்களில் வீதியின் இருமருங்குகளிலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

 


கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில், பஸ் தரிப்பிடத்தில் ஒருசில வினாடிகள் மட்டுமே நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது, பாரிய மரம் விழுந்ததில், ஐவர் பலியானதுடன் காயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்த பஸ் இரண்டாக முறிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பல மணிநேரத்துக்குப் பின்னர், அந்த பாரிய மரணம் துண்டுத்துண்டாக வெட்டி அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிர​தேசங்களில் வீதியின் இருமருங்குகளிலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப கொழும்பு நகர எல்லையில்  100 வருடகளுக்கு மேலான  பழைய பெரிய பெரிய மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதுடன், மரங்களும் அடியோடு அறுக்கப்பட்டு, அகற்றப்பட்டன.