வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18) நபர் ஒருவர் தமிழ்
எழுத்துப்பிழைகளுடனான பதாகை ஒன்றுடன் சில நிமிடங்கள் போராட்டத்தில்
ஈடுபட்டு பின்னர் போராட்டத்தை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டுச்
சென்றார்.