சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது .

 


சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 தொடக்கம் 120 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 85 தொடக்கம் 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.