மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில்
மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அரச மருந்தாளர்கள்
சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர்
வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை மேலும்
தீவிரப்படுத்தியுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ
குறிப்பிட்டுள்ளார்.