பிரதேச சிறுவர் சபை கூட்டம் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சியாஹூல் ஹக்கின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில் சிறுவர் சபையின் தலைவர் பி.சஞ்ஜய் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (18) திகதி இடம் பெற்றது.
இதன் போது சிறுவர் கழகங்களினால் இனங்காணப்பட்ட சவால்கள் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த கூட்டத்தில் அதிகளவான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
இதன் போது உதவி பிரதேச செயலாளர்
இங்கு கருத்து தெரிவிக்கையில்
எதிர்கால தலைவர்கள் உருவாக்கப்டுவதற்கான சிறந்த களமாக சிறுவர் கழகம் காணப்படுவதுடன் எமது சமூகம் நன்மை அடைவதற்கு இளம் சமூதாயமான நீங்கள் அப்துல்கலாம் போன்ற சிந்தனையாளர்களின் வழிகளை பின்பற்ற பழக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறுவர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்களான ச.அருட்செல்வம் மற்றும் அ.அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.