ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

 


 பாடசாலைகளில் செயல்திறன் மிக்க கற்றல், கற்பித்தல் அணுகுமுறை அட்லஸ் தொடர்பான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில், சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு ,கல்குடா, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு ஆகிய நான்கு
கல்வி வலயங்களில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செயலமர்வு நடைபெறுகின்றது.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரின் அனுமதியுடன், அக்சன் யுனிட்டி லங்கா சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி கஜேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு
வை.எம்.சி.ஏ நிறுவன பிரதான மண்டபத்தில் செயலமர்வு நடைபெறுகின்றது.
அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சுதர்சன் மற்றும் திட்டத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் சதிஸ்குமாரின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகின்ற செயலமர்வில்,
வளவாளராக பாடசாலைகளில் செயல்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் அணுகுமுறை அட்லஸ் திட்ட பிரதான பயிற்றுவிப்பாளர் மாக்ரெட் தேவதாசன் கலந்துகொண்டார்.
அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை செயலாளர் சத்தியநாதன், சமூக மட்டத்தில் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செயல்படும் இளைஞர், யுவதிகள் செயலமர்வில்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.